கீ.லோ.இளவழகன்

கீ.லோ.இளவழகன்
கீ.லோ.இளவழகன்

Wednesday, April 6, 2011

ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 42. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. சோளிங்கர், ராணிப்பேட்டை, போளூர், ஆரணி, அணைக்கட்டு, வேலூர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் வரலாற்று பின்னனியுடனும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்தது ஆற்காடு தொகுதி. ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் ஆற்காடு ஆகும். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.

பழங்காலத்தில் ஆற்காட்டை சுற்றி புதுப்பாடி, வேப்பூர், விஷாரம், காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய 6 பகுதிகள் காடுகளாக இருந்ததாகவும் அந்த காடுகளில் பரத்வாஜமுனிவர், வசிஸ்டேஷ்வரர், விசுவாமித்திரர், கவுதமர், அகத்தியர், அத்திரி மகரிஷி மற்றும் முனிவர்கள் தவம் செய்ததாகவும் அதன் காரணமாக ஆறு காடுகள் என அழைக்கப்பட்டதாகவும், பின்னர்அது நாளடைவில் மருவி ஆற்காடு என அழைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆற்காடு முன்பு ஆர்க் எனப்படும் அத்தி மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆற்காடு என பெயர் வந்ததாக கூறப்படுகிது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் முன்பு ஆற்காடும் அடங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது. பின்னர் 1956-ம் வருடத்தில் ஆந்திர- தமிழக எல்லைகள் பிரிக்கப்பட்ட போது சித்தூர் ஆந்திர மாநிலத்திலும், ஆற்காடு தமிழ்நாட்டிலும் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாகவும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றது ஆற்காடு சட்டமன்ற தொகுதி. குறிப்பாக நவாப்புகள் ஆட்சி காலத்தில் ஆற்காட்டைத்தான் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆற்காட்டின் பிரதான சின்னமாக டெல்லிகேட் விளங்கி வருகிறது. ஆற்காடு பகுதியில் நவாப்புகள் ஆட்சி காலத்தில் தினம் ஒரு மசூதியில் தொழுகை செய்வதற்காக 365 மசூதிகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பச்சைக்கல் மசூதி மிகவும் பிரசித்தி பெற்றது. ஆற்காட்டில் சிறப்பு பெற்றவை கிச்சிடி சம்பா அரிசியும், இனிப்பு வகைகளில் மக்கன்பேடாவும் ஆகும்.


தொகுதியில் அடங்கிய பகுதிகள்

ஆற்காடு தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 232 ஆகும். இதில் ஆண் வாக்காளர் 1 லட்சத்து 2 ஆயிரத்து 459 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 772 பேர், 1 திருநங்கை வாக்காளரும் அடங்கியுள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 313 பேர் அதிகமாக உள்ளனர். மொத்த வாக்குசாவடிகள் 258.

இந்த தொகுதியில் நகராட்சியில் 30 வார்டுகளும், ஆற்காடு ஒன்றியத்தில் 27 பஞ்சாயத்துகளும், திமிரி ஒன்றியத்தில் 56 பஞ்சாயத்துக்களும், புதியதாக இணைக்கப்பட்ட கணியம்பாடி ஒன்றியத்தில் 19 பஞ்சாயத்துக்களும் (ஒரு பகுதி) உள்ளன.

ஆற்காடு மற்றும் வேலூர் தாலுகாவின் பல பகுதிகள் ஆற்காடு தொகுதியில் வருகின்றன. பலமடை, இடையஞ்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், நெல்வாய், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு, பங்களத்தான், சலமநத்தம், கணியம்பாடி, வேப்பம்பட்டு, கனிக்கனியன், கதலாம்பட்டு, பழாத்து வண்ணான், சிங்கிரிகோயில், வல்லம், கீழ்பள்ளிப்பட்டு, மோட்டு பாளையம், கம்மசமுத்திரம், மற்றும் மோத்தக்கல் கிராமங்களும் இத்தொகுதியின் கீழ் வருகின்றன.
ஆற்காடு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் கீ.லோ. இளவழகன். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

Sunday, April 3, 2011

பா.ம.க தேர்தல் அறிக்கை 

PMK Menifesto 2011